தக்காளி தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 1 1/4 கிண்ணம்
2. உளுத்தம்பருப்பு – 4 தேக்கரண்டி
3. தக்காளி – 4 எண்ணம்
4. தேங்காய்த் துருவல் – 2 தேக்கரண்டி
5. சீரகம் – 1 தேக்கரண்டி
6. மிளகாய் வத்தல் – 10 எண்ணம்
7. பெருங்காயம் – சிறிது
8. உப்பு – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சரிசியையும், உளுத்தம் பருப்பையும் கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும்.
3. தக்காளியைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
4. முதலில் சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை அரைத்துக் கொண்டு, பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.
5. அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து, அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும்.
6. தோசைக் கல்லில் காய வைத்து, மாவைத் தோசையாக வார்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்துப் பரிமாறலாம்.
குறிப்பு:
தக்காளி தோசைக்கு மல்லிச் சட்னி சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.