கோழிக்கறி மிளகாய் வறுவல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1/2 கிலோ
2. மிளகாய் வற்றல் - 12 எண்ணம்
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு - 1 தேக்கரண்டி
7. இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 எண்ணம்
8. பூண்டு - 5 பல்
9. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
10. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. கறியைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சுத்தமாக கழுவி வைக்கவும் .
2. சுத்தம் செய்த கறித்துண்டுகளை உப்பு மஞ்சள்தூள் சேர்த்துப் பிசறி வைக்கவும் .
3. மிளகாய் வற்றலைச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் காய வைத்து, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
5. அதன் விதைகள் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.
6. நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
7. இப்போது உப்பு மஞ்சள் சேர்த்த கோழிக்கறியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
8. பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
9. மிளகாய்வற்றல், தக்காளி இரண்டும் தன் தோல் தனித்து வரும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
10. மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கறியை மென்மையாக வேக விடவும்.
11. பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து, மேலே சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.