நண்டு மசாலா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 1/2 கிலோ
2. வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 100 கிராம்
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
6. மல்லித் தூள் - 6 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
8. தேங்காய் - 1/2 மூடி
9. இஞ்சி - சிறிய துண்டு
10. பூண்டு - 4 பல்
11. உப்பு - தேவையான அளவு
12. நல்லெண்ணெய் - தேவையான அளவு
13. சோம்பு - 1 தேக்கரண்டி
14. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. நண்டை 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் 1/2 மணி நேரம் போட்டு வைத்திருந்து, பின்னர் சுத்தம் செய்து வைக்கவும்.
2. தேங்காய், இஞ்சி, பூண்டை இலேசாக வறுத்து அரைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
4. தாளிசத்துடன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
6. அரைத்த தேங்காய், பூண்டு கலவையுடன், நண்டையும் சேர்த்து வேக வைக்கவும்.
7. நண்டு மசாலா கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.