முட்டை வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 4 எண்ணம்
2. கடலை மாவு - 2 தேக்கரண்டி
3. அரிசிமாவு - 3 தேக்கரண்டி
4. கார்ன் பிளவர் - 2 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
6. அரைத்த மல்லி, புதினா விழுது - 1 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
1. முட்டையை அவித்து நீளவாக்கில் இரண்டாக மஞ்சள் கரு உடையாமல் நறுக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கிய முட்டைகளை மல்லி, புதினா விழுதில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.
3. மாவு வகைகள், உப்பு, மிளகாய்த்தூளை சிறிது நீர் தெளித்துப் பிசறி முட்டைகளை அந்த மாவில் பிரட்டி எடுக்கவும்.
4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடேறியதும், சிறிது நல்லெண்ணெய் விட்டு முட்டைகளை மெதுவாக போடவும். சுற்றிலும் மீண்டும் எண்ணெய் விடவும். சிவந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
5. பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.