முட்டை வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 6 எண்ணம்
2. வெங்காயம் - 50 கிராம்
3. மிளகாய் வற்றல் -10 கிராம்
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. மஞ்சள் - தேவையான அளவு
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. முட்டையை வேக வைத்து நீளவாக்கில் நான்கு பக்கமும் கீறி வைக்கவும்.
2. மிளகாய் வற்றல், சீரகம், உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை போன்றவற்றை வெறும் சட்டியில் வறுத்துத் தூள் செய்யவும்.
3. இவற்றுடன் மஞ்சள், உப்புத்தூளைக் கலக்கி வைக்கவும்.
4. கீறி வைத்த முட்டையினுள் கீறிய பாகத்தினுள் தூள் செய்து வைத்திருக்கும் பொடியை வைக்கவும்.
5. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கி முட்டைகளையும் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.