முட்டை கட்லட்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அவித்த முட்டை - 4
2. உருளைக் கிழங்கு - 250 கிராம்
3. பல்லாரி வெங்காயம் - 50 கிராம்
4. முட்டை - 1
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. மல்லித்தழை - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
8. ரஸ்க்தூள் - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை அவித்து அதை மசித்து, அத்துடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு கலந்து கொள்ளவும்.
2. அவித்த முட்டையின் மீது மசியலால் மூடவும்.
3. அடித்து வைத்திருக்கும் முட்டையில் புரட்டி ரஸ்க்தூள் தடவி எண்ணெய்யில் பொறித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.