முட்டை சுக்கா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 6 எண்ணம்
2. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
3. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
அரைக்க:
5. சோம்பு - 1 தேக்கரண்டி
6. பட்டை - 1 துண்டு
7. கிராம்பு - 2 எண்ணம்
8. பூண்டு - 2 பல்
9. இஞ்சி - சிறிய துண்டு
10. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
13. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. முட்டையை வேக வைத்து மேல் ஓட்டை எடுத்துத் தயாராக வைத்துக் கொள்ளவும்.
2. மேலே அரைக்கக் கொடுத்துள்ள மசாலாவை அரைத்து, உப்பு, எண்ணெய், மசாலா பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. பின்னர் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
4. அதன் பின் முட்டையை இரண்டாக நறுக்கி,கலந்து வைத்துள்ள மசாலா விழுதை தேய்த்துப் பத்து நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
5. வாணலியில், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தயாராக உள்ள மசாலா தடவிய முட்டைகளை அடுக்கவும்.
6. மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வரைவைத்து, பின்னர் திருப்பிப் போட்டு, கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
7. மேலும் ஐந்து நிமிடங்கள் கலந்து, நன்கு முட்டை மசாலா வற்றி வந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.