முட்டை மிளகு வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. முட்டை (வேக வைத்தது) - 4 எண்ணம்
2. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
3. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
4. மிளகுத்தூள் - 1 மேசைக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
7. வெங்காயம் - 1 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
9. மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - தேவையான அளவு
செய்முறை:
1. வேக வைத்த முட்டையைக் கீறி வைக்கவும்.
2. ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி முட்டையைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3. அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அதில் மல்லித்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
5. பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
6. பின்னர் முட்டையைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
7. மல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.