முட்டை ரோஸ்ட்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 4 எண்ணம்
2. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
3. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
4. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
5. சோம்புத்தூள் - 1/4 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. முட்டையை வேக வைத்து நறுக்கிக் கொள்ளவும்.
2. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்தும், அதில் கறிவேப்பிலை, மசாலாப் பொருட்கள், உப்பு சேர்த்து வதக்கவும்.
3. அதில் முட்டைத் துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.