மீன் சில்லி வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாறை மீன் - 1 கிலோ
2. முட்டை - 1 எண்ணம்
3. மிளகாய்த்தூள் - 1 கரண்டி
4. சோளமாவு (கார்ன்ப்ளவர்) - 3 மேசைக்கரண்டி
5. மைதா - 3 மேசைக்கரண்டி
6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
7. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. மீனைச் சுத்தம் செய்து சிறிய அளவிலான சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அதில், உப்பு, எலுமிச்சைச் சாறு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. பின் மைதா, சோளமாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
4. பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
5. அதை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்.
6. அதன் பிறகு வாணலியில்எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மீன் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.