மீன் உருளை உருண்டைப் பொறியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வஞ்சிரம் அல்லது முள்ளில்லாத மீன் - 1/2 கிலோ
2. உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - 300 கிராம்
3. வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கோப்பை
4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - சிறிது
7. முட்டை (வெள்ளைக்கரு மட்டும்) - 2 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
10. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. ஒரு கடாயில் மீன் துண்டுகளைப் போட்டு, அதனுடன் சிறிது மஞ்சள்தூள், உப்பு தண்ணீர் சேர்த்து மீனை முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
2. பிறகு மீனைத் தண்ணீர் வடித்து தோல் மற்றும் முள் நீக்கி உதிரி உதிரியாக உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
3. மீனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலா, நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
4. பிறகு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிசைந்து இறுதியாக உப்பு சரிபார்த்து தேவையெனில் உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
5. பிசைந்த கலவை சற்று கெட்டியாக இருக்கவேண்டும் தண்ணீர் போல் இருப்பதாக தோன்றினால் இதனுடன் சிறிது பிரெட் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
6. அதன் பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
7. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயவிடவும்.
7. உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையின் வெள்ளைக் கருவில் நன்றாகப் பிரட்டி மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.