வஞ்சிரம் மீன் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வஞ்சிரம் மீன் - 1/2 கிலோ
2. காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
3. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
4. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
5. கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
6. சீரகம் - 1/4 தேக்கரண்டி
7. சோம்புத்தூள் - 1/4 தேக்கரண்டி
8. கார்ன்ப்ளவர் - 1 தேக்கரண்டி
9. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
10. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் (பொறிக்க) - தேவையான அளவு
12. உப்பு - தேவையானஅளவு
13. எலுமிச்சை - 1/2 எண்ணம்
14. கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
2. ஒரு தட்டில் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து, அதனுடன் தேவையான உப்பு, எலுமிச்சைச் சாறு, சிறிது தண்ணீர் தெளித்து விழுதாகக் கலக்கவும்.
3. விழுதை மீன் துண்டுகளில் தடவி ஒரு மணி நேரம் வரை உணர விடவும்.
4. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, அதில் மசாலா விழுது தடவிய மீன் துண்டுகளைப் போட்டு, ஒரு புறம் வெந்தவுடன், திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
5. தாளிசக் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலையை இலேசாக வதக்கி எடுக்கவும்.
6. பொறித்து எடுத்த மீன் துண்டுகளின் மேலாக, வதக்கிய கருவேப்பிலையைத் தூவிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.