சில்லி மீன் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாறை மீன் - 1 கிலோ
2. முட்டை - 1 எண்ணம்
3. மிளகாய்த்தூள் -1 கரண்டி
4. சோள மாவு (கார்ன்பிளவர்) - 3 மேசைக்கரண்டி
5. மைதா - 3 மேசைக்கரண்டி
6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
7. சில்லி சாஸ் - 1 கரண்டி
8. சோயா சாஸ் - 1/2 கரண்டி
9. தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
10. எலுமிச்சைச் சாறு - 1/2 கரண்டி
11. எண்ணெய் (பொரிப்பதற்கு) - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மீனை வாங்கும் போதே, சில்லி போடுவதற்கேற்றபடி சிறிய அளவிலான சதுரமாக வெட்டி வாங்கி, சுத்தம் செய்து வைக்கவும்.
2. உப்பு, எலுமிச்சைச் சாறு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
3. அதன் பின்பு, சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
4. அதன் பிறகு, மைதா, சோள மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
5. அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, அதை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மீன் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.