மீன் முட்டை மசாலா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மீன் முட்டை - 100 கிராம்
2. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
5. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
6. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. மீன் முட்டையைச் சுத்தம் செய்து, நீரை வடித்து வைக்கவும்.
2. மீன் முட்டையுடன் இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் வரை ஊற விடவும்.
3. தோசைக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும், எண்ணெய் ஊற்றி வைத்து, அதில் ஊற வைத்த மீன் முட்டை மசாலாவை ஊற்றிப் பரப்பிவிட்டு, ஒரு புறம் வெந்ததும், மறுபுறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.