இறால் மிளகு வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சுத்தம் செய்த இறால் – 250 கிராம்
2. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
3. இஞ்சி – 25 கிராம்
4. பூண்டு – 25 கிராம்
5. வெங்காயம் – 1எண்ணம்
6. மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் – தேவையான அளவு
10. உப்பு – தேவையான அளவு
11. கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால் மீனைப் போட்டு, அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து ஊற வைக்க வேண்டும்.
2. இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்னர் அதில் அரைத்து வைத்த இஞ்சிப் பூண்டுக் கலவையைச் சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்கவும்.
5. கடைசியாக ஊற வைத்துள்ள இறாலை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை ஒரு சில நிமிடம் நன்கு பிரட்டி விட்டு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.