நெத்திலிக் கருவாடு பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நெத்திலி கருவாடு – 100 கிராம்
2. வெங்காயம் – 100 கிராம்
3. பச்சை மிளகாய் – 10 எண்ணம்
4. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
7. கறிவேப்பிலை – சிறிது
8. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
2. நெத்திலிக் கருவாடைத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துப் பின் சுத்தம் செய்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் நன்கு வதங்கியதும், பச்சை மிளகாய், நெத்திலி கருவாடு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
6. அனைத்தும் நன்றாக வெந்து, சுருண்டு வந்த பின்பு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.