மதுரை மட்டன் சுக்கா
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி (மட்டன்) - 250 கிராம்
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. தேங்காய் - 1 துண்டு
5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
7. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
11. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. சுத்தம் செய்யப் பெற்ற மட்டன் துண்டுகளுடன், சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
2. அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3. அத்துடன் சிறிதாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. அனைத்துப் பொடி வகைகளையும் சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் வேக வைத்த ஆட்டுக்கறியைச் சேர்த்து, அதிகமான நெருப்பில் நன்றாகக் கலந்து விடவும்.
6. இறுதியில் மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
7, கடைசியாக, நறுக்கிய மல்லித்தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.