கற்கண்டு பொங்கல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 200 கிராம்
2. பால் அல்லது தண்ணீர் - 600 மி.லி
3. கல்கண்டு - 350 கிராம்
4. ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
5. வறுத்த முந்திரி – 15 எண்ணம்
6. நெய்- 75 மி.லி
7. குங்குமப்பூ -1 சிட்டிகை
செய்முறை :
1. அரிசியுடன் பால் அல்லது தண்ணீர் கலந்து குக்கரில் வைக்கவும்.
2. கொதி வந்ததும் குக்கரை மூடி வெயிட் போட்டு, அடுப்பைக் குறைக்கவும்.
3. அதன் பிறகும் 10 நிமிடத்தில் இறக்கவும்.
4. அதனுடன் கல்கண்டு, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து மீதியுள்ள நெய்யை ஊற்றி இறக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.