சாமைப் பொங்கல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சாமை அரிசி - 3/4 கப்
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
5. மிளகு - 1 தேக்கரண்டி
6. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
7. கருவேப்பிலை - சிறிது
8. பூண்டு பல் - 3 எண்ணம்
9. மஞ்சள்தூள் - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
11. சீரகம் - 1 தேக்கரண்டி
12. மிளகு - 1 தேக்கரண்டி
13. கருவேப்பிலை - சிறிது
14. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
16. நெய் - தேவையான அளவு.
செய்முறை :
1. சாமை அரிசி, பாசிப்பருப்பைத் தனித்தனியாக நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
2. சாமை அரிசியுடன் பருப்பு, தண்ணீர் சேர்த்துக் குக்கரில் வைக்கவும்.
3. அதனுடன் பச்சை மிளகாய் தவிர்த்து, மற்ற பொருட்களைச் சேர்த்துக் கரண்டியால் கிளறிவிடவும்.
4. குக்கரை அதிக நெருப்பில் 3 விசில் வரை வேக விடவும்.
5. அதன் பிறகு, 5 நிமிடங்கள் சிறிய நெருப்பில் வேக வைத்து இறக்கவும்.
6. ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்து கரண்டியினால் கிளறிவிடவும்.
7. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப் பருப்புகளைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
8. பிறகு அதே நெய்யில் சீரகம், மிளகு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை வதக்கி எடுக்கவும்.
9. வதக்கிய பொருட்களைப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.