அவல் பொங்கல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவல் -1 கப்
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. நெய் -2 மேஜைக்கரண்டி
4. இஞ்சி துருவியது - 2 தேக்கரண்டி
5. சீரகம் -1/4 தேக்கரண்டி
6. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
7. மிளகு - 1/4 தேக்கரண்டி
8. சீரகம் - 1/4 தேக்கரண்டி
9. முந்திரிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
10. பச்சைமிளகாய் -2 எண்ணம்
11. கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
1. பாசிப்பருப்பை வாணலியில் ஒரு நிமிடம் வரை வறுத்து எடுக்கவும்.
2. வறுத்து எடுத்தப் பாசிப்பருப்பில் தண்ணீர் விட்டு, பாதி அளவு துருவிய இஞ்சியையும், ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து பூப்போன்று வேக வைத்துக் கொள்ளவும்.
3. அவலை நன்கு அலசி, ஐந்து நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
5. அதில் ஊறவைத்த அவல், உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும்.
6. மிதமான நெருப்பில் பொங்கல் பதம் வரும்வரை சமைத்து, சிறிது மிளகுத்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.