புளிச்ச கீரை சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
2. எண்ணெய் - தேவையான அளவு
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
6. கறிவேப்பிலை - சிறிது
அரைக்க :
7. வெங்காயம் - 2 எண்ணம்
8. பூண்டு - 10 பல்
9. மிளகு - 1 தேக்கரண்டி
10. பச்சை மிளகாய் - 6 எண்ணம்
11. புளிச்ச கீரை - 1 கட்டு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. கீரையை நன்றாகச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
5. கீரை நன்றாக வதங்கியவுடன் அதில் வடித்து வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.