அவல் பொங்கல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கப்
2. பயத்தம்பருப்பு - 1 கப்
3. மிளகு - 1 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
6. இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிது
8. நெய் - 1/2 கப்
9. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. பயத்தம்பருப்பை வேக விடவும். பருப்பு வெந்ததும் அவலைச் சேர்க்கவும்.
2. இரண்டும் சேர்ந்து கெட்டியானதும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
3. ஒரு கடாயில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம் போட்டு வதக்கவும்.
4. அதனுடன் முந்திரிப்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. வதக்கிய அனைத்தையும் அவல் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.