புளியோதரைச் சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. உதிராக வடித்த சாதம் - 2 கப்
2. புளி - சிறிய எலுமிச்சை அளவு
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. கறிவேப்பிலை - சிறிது
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. வெல்லத் துருவல் - 2 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
9. கடுகு - 2 தேக்கரண்டி
10. உளுந்து - 1 தேக்கரண்டி
11. கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
12. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
13. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
1. சாதம் சூடாக இருக்கும் போதே, அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழியாக்கவும்.
2. அதில் இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.
3. புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
4. மீதமுள்ள எண்ணெயில் 1 தேக்கரண்டி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைச் சிவக்க வறுக்கவும்.
5. பின்பு அதில் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போகக் கொதிக்க வைக்கவும்.
6. பிறகு வெல்லம் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
7. மீதமுள்ள கடுகை அரைத்து வைக்கவும்.
8. சாதத்தில் புளி கலவை, அரைத்து வைத்துள்ள கடுகு விழுது சேர்த்துக் கிளறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.