மாங்காய் சாதம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. உதிராக வடித்த சாதம் - 2 கப்
2. புளிப்பான மாங்காய் - 1 எண்ணம்
3. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
4. கடுகுத் தூள் - 2 தேக்கரண்டி
5. நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. நெய் - 2 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. மாங்காயைப் பொடியாக நறுக்க்கவும்.
2. எண்ணெயுடன் மாங்காய், பொடி வகைகள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
3. நெய்யில் கடுகைப் பொரித்தெடுக்கவும்.
4. சூடான சாதத்தில் தாளிசக் கலவை மற்றும் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.