தேங்காய் சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வடித்த சாதம் - 2 கோப்பை
2. தேங்காய் (துருவியது) – 1 கோப்பை
3. உப்பு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
4. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
7. கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
8. வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
9. முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி
10. வர மிளகாய் - 4 எண்ணம்
11. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
1. ஒரு கோப்பை அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, பாதி தேங்காய்ப் பால், பாதித் தண்ணீர், உப்பு சேர்த்து சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. வடித்த சாதத்தை ஆற வைக்கவும். இது கிளறும்போது சாதம் உடைந்து விடாமல் இருக்க உதவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, வரமிளகாய் போட்டுத் தாளிசம் செய்யவும்.
4. பின்னர் அதில் வேர்க்கடலை, கடலைப்பருப்பு, முந்திரி, உளுத்தம்பருப்பு என்று ஒன்றொன்றாகச் சேர்த்து வறுக்கவும்.
5. பிறகு கறிவேப்பிலை, தேங்காய், மற்றும் உப்பு சேர்த்து மிதமான நெருப்பில் இரண்டு நிமிடம் வதக்கவும்.
6. வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.
குறிப்பு: தேங்காய் சேர்த்து அதிக நேரம் வதக்கினால் எண்ணெய் வாடை வரும். எனவே, இரண்டு நிமிடத்துற்கு மேல் வதக்கக் கூடாது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.