எள் சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உதிராக வடித்த சாதம் - 2 கோப்பை
2. கடுகு - 1 தேக்கரண்டி
3. கறிவேப்பிலை - சிறிதளவு
4. நெய் - 1 மேசைக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
பொடிக்க:
6. எள் - 2 மேசைக்கரண்டி
7. உளுந்து - 1 மேசைக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
9. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
10. எண்ணெய் - 2 தேக்கரண்டி
11. பெருங்காயம் - சிறு துண்டு.
செய்முறை :
1. எள்ளை வெறும் வாணலியில் போட்டு, பொரியும்படி வறுத்தெடுக்கவும்.
2. எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்துப் பிறகு மிளகாய் வற்றல், உளுந்து, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுக்கவும்.
3. எள் மற்றும் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிருதுவாகப் பொடித்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
5. சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
6. கிளறிய சாதத்தில் கடுகு தாளிதத்தை சேர்த்துக் கலக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.