பூண்டு சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உதிராக வடித்த சாதம் - 2 கோப்பை
2. சின்ன வெங்காயம் - 1/2 கோப்பை
3. பூண்டு - 1 கோப்பை
4. இஞ்சி - 1 துண்டு
5. கறிவேப்பிலை - சிறிது
6. மிளகுத் தூள் (வறுத்துப் பொடித்தது) - 2 தேக்கரண்டி
7. சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1/2 தேக்கரண்டி
11. நெய் - 2 மேசைக்கரண்டி
12. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கி வைக்க்கவும்.
2. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
5. அந்த பூண்டுக் கலவையைச் சாதத்தில் சேர்த்துக் கிளறவும்.
6. உப்பு சரிபார்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கொண்டு பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.