கேழ்வரகுக் கூழ்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 500 கிராம்
2. பச்சரிசி - 200 கிராம்
3. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
4. தயிர் - 2 கப்
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. கேழ்வரகு மாவு, 2 கரண்டி தயிர், சிறிது உப்பு என்று மூன்றையும் 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து முந்தின நாளேப் புளிக்க வைக்கவும்.
2. பச்சரிசியை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும்.
3. குக்கரை அடுப்பில் வைத்து நான்கு அல்லது ஐந்து ஆழாக்கு தண்ணீர் விட்டு, பொடித்து வைத்திருக்கும் பச்சரிசியைப் போட்டு 2 விசில் வரை விட்டு வேகவிடவும்.
4. நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும்.
5. கையில் தண்ணீர் தொட்டு வெந்து விட்டதா என்று பார்க்கும் போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும்.
6. ஐந்து மணி நேரம் கழித்து அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு, அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.