மூங்கில் அரிசிக் கஞ்சி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. மூங்கில் அரிசி – 150 கிராம்
2. நொய் அரிசி – 150 கிராம்
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. ஓமம் – 1/2 தேக்கரண்டி
5. பூண்டு – 6 பல்
6. சுக்கு – சிறிய துண்டு
7. நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
1. மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும்.
2. பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
3. அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டைப் போட்டு வதக்கவும்.
4. பூண்டு நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
5. முதல் கொதி வந்ததும், மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
6. நன்றாகக் கொதித்துக் கஞ்சிப் பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், முதுகெலும்பு வலி,, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.