தயிர் சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 200 கிராம்
2. தயிர் (புளிக்காதது) - 2 கப்
3. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
4. கேரட் துருவல் - 1/4 கப்
5. மாங்காய் (சிறு துண்டுகளாக) - 1/4 கப்
6. மாதுளை முத்துகள் - 1/4 கப்
7. திராட்சை - 20 எண்ணம்
8. ஆப்பிள் (சிறு துண்டுகளாக) - 1/4 கப்
9. வெள்ளரிப் பிஞ்சு (சிறு துண்டுகளாக) - 1/2 கப்
10. மல்லித்தழை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு, வேக வைத்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.
2. நறுக்கிய மல்லித்தழை நீங்கலாக, அனைத்து காய்கறிகள், பழங்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும்.
3. அதில் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
4. பிறகு, நன்கு மசித்த சாதம், மல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.