வெண் பொங்கல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 250 கிராம்
2. பாசிப்பருப்பு – 100 கிராம்
3. நெய் -75 மி.லி
4. வறுத்த முந்திரி-15 எண்ணம்
5. மிளகு - 20 எண்ணம்
6. இஞ்சி - சிறிதளவு
7. கறிவேப்பிலை - சிறிது
8. பெருங்காயத்தூள் - சிறிதளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. பாசிப்பருப்பையும், அரிசியையும் தண்ணீர் ஊற்றி நன்கு கலையவும்.
2. குக்கரில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சிறிதளவு சீரகம், ஐந்தாறு மிளகுடன், அரிசி பருப்பு கலவையை வாசம் வரும் வரை வறுக்கவும்.
3. ஒரு பங்கு அரிசி பருப்பு கலவைக்கு 4 பங்கு தண்ணீர் வைக்கவும்.
4. ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை குறைக்கவும். பத்து நிமிடத்தில் இறக்கி விடலாம்.
5. அடுத்து இருப்புச் சட்டியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றிச் சிறிது கடுகு போட்டுப் பொறிந்ததும், தோல் சீவிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, சிறிதளவு பெருங்காயம், கறிவேப்பிலை, வறுத்த முந்திரி, பொடித்த மிளகு போட்டுத் தாளித்துக் கொட்டினால் சுவையான வெண் பொங்கல் தயார்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.