கடலை மாவு சட்னி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பெரிய வெங்காயம் - 200 கிராம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
4. கடலை மாவு - 50 கிராம்
5. கடுகு & உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிது
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைச் சிறிதாகவும் நறுக்கி வைக்கவும்.
2. சிறிது தண்ணீரில் கடலைமாவைக் கரைத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் போட்டுத் தாளித்துக் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
4. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
5. அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. பின்னர் அத்துடன் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவுக் கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.