முள்ளங்கி சட்னி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முள்ளங்கி - 200 கிராம்
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. புளி - சிறு நெல்லிக்காய் அளவு
4. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
5. சீரகம் - 1/4 தேக்கரண்டி
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. பூண்டு - 10 பற்கள்
8. நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
9. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
10. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
11. பெருங்காயம் - 2 சிட்டிகை
12. கறிவேப்பிலை - சிறிது
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முள்ளங்கியைக் தோல் சீவி, கழுவி, பொடியாக நறுக்கி வெறும் வாணலியில் வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைச் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், வர மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
4. அனைத்தையும் நன்றாக வதக்கிய பிறகு வதக்கிய முள்ளங்கி சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
5. ஆறியவுடன் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
6. தனியே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதனை அரைத்த சட்டினியுடன் சேர்த்து நன்கு கிளறிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.