வெற்றிலைத் துவையல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வெற்றிலை - 7 எண்ணம்
2. எண்ணெய் - சிறிது
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. உளுந்து - 1/2 தேக்கரண்டி
5. கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
6. பூண்டு - 4 பல்
7. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
8. புளி - பாக்கு அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெற்றிலையை துண்டு செய்து வைக்கவும்.
2. வாணலில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
3. அதில் வெற்றிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கிப் பூண்டு, உப்பு, புளி போட்டு வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.
4. ஆறியதும் அதை அரைத்துச் சாப்பிடலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.