தேங்காய் மிளகு துவையல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்த் துருவல் - 1 கோப்பை
2. உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. மிளகாய் - 2 எண்ணம்
5. கடுகு - சிறிது
6. புளி - சிறிது
7. பெருங்காயத் தூள் - சிறிது
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் உளுந்தம் பருப்பு, மிளகு மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. அது ஆறிய பின்பு, அதனுடன் உப்பு சேர்த்துத் தேங்காய்த் துருவல், புளி, சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.