தேங்காய்த் துவையல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் -1 மூடி
2. புளி - சிறிது
3. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
4. உப்பு- தேவையான அளவு
தாளிக்க:
5. கடுகு-1 தேக்கரண்டி
6. உளுந்தம்பருப்பு -1 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் -சிறிது
8. கறிவேப்பிலை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
2. தேங்காய், உப்பு, புளி ,மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. அதில் தாளித்த பொருட்களைச் சேர்த்து மிக்சியில் இலேசாக, கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.