முருங்கைக் கீரைத் துவையல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக் கீரை - 1 கோப்பை
2. உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
3. மிளகாய் வற்றல் - 12 எண்ணம்
4. புளி - சிறிது
5. பூண்டு - 4 பற்கள்
6. பெருங்காயத் தூள் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முருங்கை கீரையை நன்றாகச் சுத்தம் செய்து, கழுகி எடுத்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில், ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், புளி, பெருங்காயம், பூண்டு சேர்த்து வறுத்து எடுத்து ஆற விடவும்.
3. அதன் பின்னர், வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முருங்கை கீரை சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.
4. ஒரு மிக்ஸியில் முதலில் வறுத்து வைத்திருக்கும் உளுத்தம்பருப்பு, வற்றல், போட்டு கொஞ்சம் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
5. அத்துடன் வதக்கி வைத்திருக்கும் முருங்கைக் கீரையைச் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.