நெல்லிக்காய்த் துவையல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பெரிய நெல்லிக்காய் - 4 எண்ணம்
2. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
3. உளுந்தம் பருப்பு - 50 கிராம்
4. உப்பு - தேவையான அளவு
5. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. நெல்லிக்காயை நன்கு கழுவி, அதன் விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பச்சை மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3. நெல்லிக்காயை சிறிது சிவக்க வறுத்து எடுத்துக் கொண்டு, தட்டில் சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸியில் போட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொகொரப்பாக அரைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.