முட்டைக்கோஸ் துவையல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சின்ன முட்டைக்கோஸ் - 1 எண்ணம்
2. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
3. உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
5. புளி - சிறிது
6. தேங்காய்த் துருவல் - 1/4 கோப்பை
7. பெருங்காயத் தூள் - சிறிது
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்துல் கொள்ளவும்.
2. வாணலியில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், புளி சேர்த்துப் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
3. மிக்ஸியில் தேங்காய்த் துருவல், வறுத்த பருப்புகள், முட்டைக்கோஸ், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்துத் தாளித்து எடுக்கவும்.
5. அரைத்து வைத்திருக்கும் துவையலுடன் தாளிசத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.