பசலைக்கீரை கூட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பசலைக்கீரை - 1 கட்டு
2. பாசிப் பருப்பு - 1 கப்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. எண்ணெய் - 2 டீஸ்பூன்
6. தேங்காய்த் துருவல் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
8. எண்ணெய் - 2 தேக்கரண்டி
9. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
10. கடுகு - 1 தேக்கரண்டி
11. சீரகம் - 1 தேக்கரண்டி
12. பூண்டு - 5 பற்கள்
13. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
14. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
2. தாளிசத்தில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
3. பின்னர், அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
4. கீரையானது நன்கு வெந்ததும், அதில் பாசிப்பருப்பைச் சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
5. பின் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.