செளசெள கூட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 1/2 கப்
2. செளசெள காய் - 1 எண்ணம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
5. கறிவேப்பிலை - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
அரைக்க
7. தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
8. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
9. சீரகம் - 1 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
2. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. அதில் நறுக்கி வைத்திருக்கும் சௌசௌ காய்த் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
6. காய் நன்கு வதங்கியதும் அதில் வேகவைத்த பருப்பு, மற்றும் அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.