மேக்ரோனி குடைமிளகாய் பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மேக்ரோனி – 1/4 கப்
2. துவரம்பருப்பு – 1/2கப்
3. தக்காளி – 2 எண்ணம்
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. குடைமிளகாய் – 1 எண்ணம்
6. பச்சைமிளகாய் – 2 எண்ணம்
7. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
8. புளி – நெல்லிக்காய் அளவு
9. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
10. கடுகு, உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
11. சோம்பு – 1/2 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மேக்ரோனி, துவரம்பருப்பைத் தனித்தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.
2. தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. புளியைச் சிறிது தண்ணீர் கலந்து ஊற வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்.
4. பின் குடைமிளகாய், தக்காளி போட்டு வதங்கியதும், புளிக் கரைசல், சிறிது தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, மேக்ரோனியைப் போட்டுக் கொதிக்கவிடவும்.
5. இறுதியில் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.