குடைமிளகாய் வறுவல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. குடைமிளகாய் - 2 எண்ணம்
2. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
3. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
4. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
5. காய்ந்த மிளகாய் - 4 எண்ணம்
6. பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. குடை மிளகாயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பெருங்காயத் தூள் போட்டு தாளித்து, அவற்றுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு இரண்டு நிமிடம் வறுக்கவும்.
3. வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு, தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
5. அத்துடன் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டு வேக வைக்கவும்.
6. மிளகாய் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, அவற்றுடன் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறிவிட்டு, மூன்று நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குடைமிளகாய் வறுவலை மோர் சாதம், கம்மங்கூழ், தயிர் சாதம் மற்றும் பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.