உருளைக்கிழங்கு 65
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. உருளைகிழங்கு - 200 கிராம்
2. மைதா மாவு - 2 தேக்கரண்டி
3. அரிசி மாவு - 3 தேக்கரண்டி
4. இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
5. சின்ன வெங்காய விழுது - 1 தேக்கரண்டி
6. வரமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
7. கரம்மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
8. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
9. எலுமிச்சம்பழ சாறு - 2 தேக்கரண்டி
10. தயிர் - 1 தேக்கரண்டி
11. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. உருளைகிழங்கைத் தண்ணீரில் நன்றாக அலசி, பொடியாக நறுக்கி அதனைப் பிரஷர் குக்கரில் அரை வேக்காடு வேக வைத்து எடுத்து வைக்கவும்.
2. உருளைகிழங்கு மேல் தோலை நீக்கி, அதில் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக பிசறிக் கொள்ளவும்.
3. அதில் சின்ன வெங்காய விழுது சேர்த்து நன்றாக பிசிறி வைக்கவும்.
4. உருளைகிழங்கில் அனைத்துப் பொடி வகைகளையும் சேர்த்து, அதில் அரிசி மற்றும் மைதா மாவு, எலுமிச்சம்பழ சாறு , தயிர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் உருளைகிழங்குக் கலவையை போட்டு நன்றாக முறுகலாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
6. எண்ணெயிலிருந்து எடுக்கும் வேளையில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை எண்ணெயில்ல போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
7. அதன் மேல் மிளகுத் தூள் மற்றும் உப்புத்தூள் தூவிப் பரிமாறலாம்.
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.