மாங்காய் பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 1 எண்ணம்
2. வெல்லத்தூள் - 1/2 கப்
3. ஏலக்காய் - 5 எண்ணம்
4. கடுகு - 3/4 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. எண்ணெய் - 2 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பச்சை மிளகாயைச் சிறிய துண்டுகளாகவும், மாங்காயைத் துருவியும், வெல்லம் மற்றும் ஏலக்காயை பொடி செய்தும் வைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
4. அதில், அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
5. அத்துடன், மாங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வரை வேகவிடவும்.
6. மாங்காய் வெந்ததும் பொடி செய்துள்ள வெல்லம் சேர்த்து அது கரையும் வரைக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
7. கடைசியாக, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வரை வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.