காளான் மிளகு மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 300 கிராம்
2. நல்லெண்ணெய் - 4 கரண்டி
3. சோம்பு தூள் - 2 கரண்டி
4. மிளகுத்தூள் - 2 கரண்டி
5. வெங்காயம் - 4 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
7. பூண்டு - 10 பற்கள்
8. இஞ்சி - 1 அங்குல அளவு
9. பட்டை - சிறிது
10. கிராம்பு - 3 எண்ணம்
11. பிரியாணி இலை - 1 எண்ணம்
12. உப்பு - தேவையான அளவு
13. மல்லித்தழை - கைப்பிடியளவு.
செய்முறை:
1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்புத்தூள், நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கித் தாளிக்கவும்.
2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றைப் போட்டு முதலில் லேசாக வதக்கவும்.
3. அது கால் பாகம் வதங்கியதும், காளான், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
4. தேவையெனில் எண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கிளறவும்.
5. காளான் வதங்கியதும் மல்லித்தழைகளைத் தூவி இறக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.