காலிஃபிளவர் மிளகு வறுவல்
சித்ரகலா செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காலிஃபிளவர் - 1 எண்ணம்
2. எண்ணெய் - 2 தேக்கரண்டி
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
9. பச்சை மிளகாய் - 3 எண்னம்
10. மிளகுத்தூள் = 1 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. காலிஃபிளவரை சிறிய துண்டுகளாக வெட்டி, இலேசான சுடுநீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து, அதனைச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
3. நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கி வைத்த காலிஃபிளவர், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
4. மிளகாய்த் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
5. காலிஃபிளவர் பொன்னிறமாகும் வரை மிதமான நெருப்பில்ல் நன்கு வதக்கவும்.
6. அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கருப்பு மிளகுத் தூள், உப்பு சேர்த்து இறக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.