காலிபிளவர் மஞ்சூரியன்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காலிபிளவர் - 1 எண்ணம்
2. பூண்டு - 10 பற்கள்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
5. குடை மிளகாய் - 1 எண்ணம்
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
8. கார்ன் பிளவர் - 3 மேசைக்கரண்டி
9. மைதா - 2 மேசைக்கரண்டி
10. சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
11. ரெட் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
12. எண்ணெய் - தேவையானஅளவு
13. உப்பு - தேவையான அளவு
14. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. காலிபிளவரைச் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும்.
2. பச்சை மிளகாய், குடை மிளகாய், பெரிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
3. வேக வைத்த காலிபிளவரில் கார்ன்பிளவர், மைதா, மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் உணர வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், காலிபிளவரைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
5. மற்றொரு வாணலியில், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கவும்.
6. அதில் வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
7. அதில் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்துக் கலந்து 1 தேக்கரண்டி அளவு கார்ன்பிளவரை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றி நன்கு வதக்கவும்.
8. கடைசியாக மிளகுத்தூள், மல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.