இனிப்பு மாங்காய் பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை மாங்காய் - 1 எண்ணம்
2. வெல்லத் தூள் - 1/2 கோப்பை
3. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய் துண்டுகளை ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி மாங்காய் மிருதுவாகும் வரை வேக வைக்கவும்.
2. மாங்காய் வெந்ததும், அதனுடன் பொடித்த வெல்லம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
3. வெல்லம் கரைந்து பச்சடி கெட்டியான பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைக்கவும்.
4. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.