வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளரிக்காய் - 1 எண்ணம்
2. கெட்டித் தயிர் - 1 கோப்பை
3. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
4. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. பெருங்காயத் தூள் - சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெள்ளரிக்காயைத் துருவி வைக்கவும்.
2. பச்சை மிளகாய், சீரகம் மற்றும் தேங்காயை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் தயிரை நன்றாகக் கடைந்து, அதனுடன் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
4. .துருவிய வெள்ளரிக்காயைத் தயிர் கலவையில் சேர்க்கவும்.
5. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து பச்சடியுடன் கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.